வட்டார அளவிலான போட்டி
புதுச்சத்திரத்தில் வட்டார அளவிலான போட்டி அரசு பள்ளியில் நடைபெற்றது.
புதுச்சத்திரம் ஒன்றிய பகுதியில் 2023-24-ம் கல்வியாண்டில் முதல் காலாண்டிற்கான கல்வி இணை மற்றும் கல்வி இணை சாரா செயல்பாடுகள் சார்ந்த வட்டார அளவிலான போட்டிகள் புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்றது. இலக்கிய மன்ற நிகழ்வுகள், சிறார் திரைப்படம் தொடர்பான நிகழ்வுகள், வினாடி-வினா மன்ற நிகழ்வுகள் மற்றும் வானவில் மன்ற நிகழ்வுகளாக வட்டார அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டன. வட்டார கல்வி அலுவலர்கள் சந்திரசேகரன், சுப்பிரமணியம் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் மகேஸ்வரி ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.
இதில் புதுச்சத்திரம் வட்டாரத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 24 மாணவர்கள் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகினர். இதில் ஆசிரியர் பயிற்றுநர், ஆசிரியர்கள் ஆகியோர் போட்டியின் நடுவர்களாக செயல்பட்டனர்.