தர்மபுரியில் போலீசார் சார்பில்பொதுமக்கள் நல்லுறவு கைப்பந்து போட்டி


தர்மபுரியில் போலீசார் சார்பில்பொதுமக்கள் நல்லுறவு கைப்பந்து போட்டி
x
தினத்தந்தி 21 April 2023 12:30 AM IST (Updated: 21 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் காவல் துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு ஏற்படுத்தும் வகையில் கைப்பந்து போட்டிகள் தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். இதில் காவலர்கள் மற்றும் மருத்துவக்கல்லூரி மாணவர்களிடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செல்வமணி, வெங்கடாசலம் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story