புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

மதுரை


தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஒளிராத மின்விளக்குகள்

மதுரை மாவட்டம் மேலக்கால் மெயின் ரோட்டில் கோச்சடை பகுதியில் உள்ள முத்துராமலிங்க தேவர் தெருவில் மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த பகுதியில் வாரச்சந்தை செயல்படுவதால் அங்கு பொதுமக்கள் செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் புதிய மின்விளக்குகள் பொருத்திட வேண்டும்.

ராஜன், கோச்சடை.

நாய்கள் தொல்லை

மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் சாலையில் செல்வோரை பின் துரத்தி சென்று அச்சுறுத்தி வருகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே மக்களை அச்சுறுத்தும் இந்த தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்த்திகேயன், மதுரை.

நடவடிக்கை தேவை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா தென்கரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி எதிரே சிலர் மது அருந்தி விட்டு அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர். இதனால் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களும் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சோழவந்தான்.

சாலை வசதி வேண்டும்

மதுரை மாவட்டம் 4 -வது வார்டு பார்க் டவுன் முதல் தெருவில் முறையான சாலை வசதி இல்லை. மழைக்காலங்களில் இந்த சாலையானது சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என யாரும் பயணிக்க முடியாத நிலையில் உள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் முறையான சாலை வசதி ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெகன், மதுரை.

இருக்கைகள் சேதமடைந்த பஸ்கள்

மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணியில் இருந்து பெரியார் பஸ் நிலையத்திற்கு இயக்கப்படும் சில பஸ்களில் இருக்கைகள் அகற்றப்பட்டும், சேதமடைந்தும் காணப்படுகிறது. இதனால் இந்த பஸ்களில் பயணிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனேவ இந்த பஸ்களி இருக்கைகளை சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மதுரை.


Next Story