பொன் மாணிக்கவேல் மீதான புகார் - சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு


பொன் மாணிக்கவேல் மீதான புகார் - சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு
x
தினத்தந்தி 22 July 2022 4:57 PM IST (Updated: 22 July 2022 5:41 PM IST)
t-max-icont-min-icon

டி.ஐ.ஜி. அந்தஸ்த்துக்கு குறையாத அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

திருவள்ளூர் டி.எஸ்.பி. காதர்பாஷா சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக சில ஆண்டுகளுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து தன்னை பழிவாங்கும் நோக்கில் முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் பொய் வழக்கு பதிவு செய்ததாக சென்னை ஐகோர்ட்டில் காதர்பாஷா மனுத்தாக்கல் செய்தார்.

சிலை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காகவே தன்னை பொய் வழக்கில் கைது செய்ததாகவும், பொன் மாணிக்கவேல் மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், பொன் மாணிக்கவேல் மீதான புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டார். டி.ஐ.ஜி. அந்தஸ்த்துக்கு குறையாத அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

1 More update

Next Story