ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடிவீரர்கள், காளைகளுக்கான முன்பதிவு நிறைவு
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடிவீரர்கள், காளைகளுக்கான முன்பதிவு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
மதுரை,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். முக்கியமாக மதுரையில் அவனியாபுரம்,, பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுகள் உலக பிரசித்தி பெற்றதாகும்.
இதில் முதலாவதாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்குபெறும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் முன்பதிவு செய்யவேண்டியது அவசியம் என்றும், மூன்றில் ஏதாவது ஒரு பகுதிகளில் நடைபெறும் போட்டிகளில் மட்டும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பங்குபெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
போட்டிகளில் பங்கேற்பதற்கான முன்பதிவு கடந்த 10ம் தேதி தொடங்கிய நிலையில், மாடுபிடி வீரர்களும், மாட்டின் உரிமையாளர்களும் விறுவிறுப்பாக முன்பதிவு செய்துவந்தனர்.
இந்த நிலையில், முன்பதிவு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்ட பின் தகுதியானவர்கள் டோக்கன்களை பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.