பா.ஜ.க. சார்பில் தாமரை மாநாடு


பா.ஜ.க. சார்பில் தாமரை மாநாடு
x

பல்லடத்தில், இன்று பா.ஜ.க. சார்பில் தாமரை மாநாடு நடக்கிறது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகிறார்.

திருப்பூர்

பல்லடத்தில், இன்று பா.ஜ.க. சார்பில் தாமரை மாநாடு நடக்கிறது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகிறார்.

தாமரை மாநாடு

பல்லடம் கரையான் புதூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தாமரை மாநாடு என்ற பெயரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது. கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசுகிறார். இதையொட்டி அந்த பகுதியில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்லடம் திருச்சி மெயின் ரோடு, பல்லடம் திருப்பூர் மெயின் ரோட்டில் சாலையின் இருபுறமும் பா.ஜ.க.கொடி கட்டப்பட்டுள்ளது. முக்கிய சந்திப்புகளில் பிரதமர் மோடி, மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரின் அலங்கார பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

பொதுக்கூட்ட ஏற்பாடுகளை மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் செந்தில்வேல், மாவட்ட பொதுச் செயலாளர் கே.சி.எம்.சீனிவாசன், உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

இது குறித்து பா.ஜ.க. நிர்வாகிகள் கூறியதாவது:-

சாதனை விளக்க பொதுக்கூட்டம்

பிரதமர் மோடி அரசின் சாதனைகளை விளக்கி மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் பல்லடத்தில் தாமரை மாநாடு என்ற பெயரில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

சுமார் 12 ஏக்கரில் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வகையில் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பல்லடம் நகரெங்கும் பா.ஜ.க. கொடிகள் கட்டப்பட்டு நகரமே விழா கோலம் பூண்டுள்ளது.

சிறப்பான வரவேற்பு

பல்லடத்திற்கு வரும் மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு, பிரமாண்டமான முறையில், வரவேற்பு அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசியலில் இந்த தாமரை மாநாடு திருப்பு முனையாக அமையும் வகையில் சிறப்பாக நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அப்போது திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவர்கள் வினோத் வெங்கடேஷ், ஜோதிமணி, ஊடக பிரிவு நரேன்பாபு, விவசாய அணி ரமேஷ் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் துரைக்கண்ணன், வடிவேல், மனோகர், பன்னீர் செல்வகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story