மொரப்பூரில் ரெயிலில் கடத்த முயன்ற 11 கிலோ கஞ்சா பறிமுதல்


மொரப்பூரில் ரெயிலில் கடத்த முயன்ற 11 கிலோ கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 19 July 2023 1:00 AM IST (Updated: 19 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அரூர்:

மொரப்பூர் ரெயில் நிலைய பகுதியில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு 11 கிலோ கஞ்சாவை கடத்திச் செல்ல முன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story