தர்மபுரி பஸ் நிலையத்தில்13 பஸ்களில் ஏர்ஹாரன்கள் பறிமுதல்அதிகாரிகள் நடவடிக்கை
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் நித்திய லட்சுமி ஆகியோர் மேற்பார்வையில், சேலம் மாவட்ட மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வக தலைமை விஞ்ஞான அலுவலர் கவுரி, சேலம் சுற்றுச்சூழல் அலுவலக விஞ்ஞானி கிருத்திகா மற்றும் தர்மபுரி மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் லாவண்யா மற்றும் தர்மபுரி மோட்டார் வாகன ஆய்வாளர் தரணீதர் ஆகியோர் கொண்ட குழுவினர் தர்மபுரி பஸ் நிலையத்தில் பஸ்களில் பொருத்தப்பட்ட அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்கள் ஒலி மாசு அளவிட்டு கருவி மூலம் சோதனை செய்தனர். அப்போது அதிகமாக ஒலி எழுப்பிய வாகனங்களின் ஒலிப்பான்களை அகற்றினர். இந்த ஆய்வு மூலம் மொத்தம் 13 பஸ்கலின் ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story