ஒகேனக்கல்லில் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த 195 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் நடவடிக்கை


ஒகேனக்கல்லில் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த 195 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் நடவடிக்கை
x
தினத்தந்தி 22 July 2023 1:00 AM IST (Updated: 22 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பென்னாகரம்:

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் பென்னாகரம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கந்தசாமி மற்றும் ஒகேனக்கல் மீன்வளத்துறை ஆய்வாளர் வேலுச்சாமி மற்றும் மீன்வளத்துறை பணியாளர்கள் மீன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 30-க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்திய சோதனையில் 5 கடைகளில் அழுகிய நிலையில் இருந்த 195 கிலோ மீன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த மீன்கள் நிலத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டது. அழுகிய நிலையில் உள்ள மீன்களை விற்பனைக்கு வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

1 More update

Next Story