நாட்டு துப்பாக்கி பறிமுதல்; ரவுடி கைது
நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு ரவுடி கைது செய்யப்பட்டார்.
பொன்மலைப்பட்டி:
நாட்டு துப்பாக்கி
திருவெறும்பூர் அருகே உள்ள காருண்யா நகர் பகுதியில் திருவெறும்பூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் திருவெறும்பூர் அருகே உள்ள கீழக்குறிச்சி அண்ணா நகரை சேர்ந்த பொந்துளி மகன் முருகானந்தம் என்ற மூல முருகானந்தம்(வயது 28) என்பதும், ரவுடியான அவர் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கியை வைத்திருந்ததும் தெரியவந்தது.
கைது
மேலும் அவர் மீது திருவெறும்பூர், பொன்மலை, புதுக்கோட்டை, நவல்பட்டு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து முருகானந்தத்தை திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பின்னர் முருகானந்தத்தை திருச்சி 6-வது குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.