தி.மு.க.-அ.தி.மு.க.வினர் இடையே மோதல்; 82 பேர் மீது வழக்கு


தி.மு.க.-அ.தி.மு.க.வினர் இடையே மோதல்; 82 பேர் மீது வழக்கு
x

செந்துறையில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 82 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள பால் பண்ணை அருகே அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. அலுவலகம் உள்ளது. இந்தநிலையில், அ.தி.மு.க.வினர் தங்களது அலுவலகத்தின் கிழக்கு பகுதியில் இருந்த சுற்றுச்சுவரை அகற்றி டீக்கடை வைக்க ஏற்பாடு செய்தனர். இதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் அ.தி.மு.க.வினர் டீக்கடை வைக்கும் பணியினை நேற்று முன்தினம் தொடங்கினர். இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.வினர் அந்த கடையை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இதனைதொடர்ந்து இருதரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர். பின்னர் கல்வீச்சில் போலீசார் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் 82 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story