இரு தரப்பினரிடையே மோதல்; 2 பேர் கைது


இரு தரப்பினரிடையே மோதல்; 2 பேர் கைது
x

இரு தரப்பினரிடையே நடந்த மோதல் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே புதுமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 42) விவசாயி, இவரது மகன் செல்வம் (15) மாற்றுத்திறனாளி, இவர் சம்பவத்தன்று வீட்டின் பின்புறம் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது வழியில் மாடு கட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏழுமலை அதே பகுதியை சேர்ந்த கொத்தனாரான பத்ரிநாராயணன் (43) என்பவரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் 2 பேரும் தங்களது ஆதரவாளர்களுடன் சோந்து ஒருவருக்கொருவர் திட்டி தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏழுமலை தியாகதுருகம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பத்ரிநாராயணன், சுப்பிரமணியன் மகன் மணிரத்தினம் (33), நாராயணன் மகன் கண்ணன், இவரது மகன் மணி ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதில் மணிரத்தினம், பத்ரிநாராயணன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல் பத்ரிநாராயணன் கொடுத்த புகாரின் பேரில் ஏழுமலை, அவரது மனைவி ரேவதி, உறவினர்கள் சரவணன், சுகந்தி, கலைநல்லூர் கிராமத்தை சேர்ந்த சங்கர், அம்சா, சடையன்குளத்தை சேர்ந்த கோவிந்தன், சுமதி, வீரமங்கலத்தை சேர்ந்த வீரப்பன், தியாகதுருகத்தை சேர்ந்த பவுனாம்பாள், பாரதி, மணிவேல், சாந்தி ஆகிய 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story