இருதரப்பினரிடையே மோதல்; 3 பேர் கைது
இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே மணலூர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 44). அதே பகுதியை சேர்ந்தவர் உறவினரான மணிகண்டன் (40) என்பவருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரும் ஒருவரையொருவர் திட்டி தாக்கிக் கொண்டனர்.
தொடர்ந்து இதுகுறித்து இருதரப்பினரும் வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். அன்பழகன் கொடுத்த புகாரில் செந்தில் மனைவி சூர்யா (27), அய்யனார் (30), ஏழுமலை (57) ஆகிய 3 பேர் மீதும், அய்யனார் கொடுத்த புகாரில் பேரில் மணிகண்டன், பிரசாந்த், தீபக், பொன்ராசு, பிரகாஷ், பூமாலை, வல்லரசு உள்ளிட்ட 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யா, பொன்ராசு, வல்லரசு ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.