இரு தரப்பினரிடையே மோதல்; 12 பேர் மீது வழக்கு


இரு தரப்பினரிடையே மோதல்; 12 பேர் மீது வழக்கு
x

பெண்ணை கேலி- கிண்டல் செய்ததில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடா்பாக 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள எல்.ஆர். பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ் மனைவி லோகநாயகி (வயது 30). இவருடைய கணவரின் அண்ணனான ராமகிருஷ்ணன் என்பவருடைய மகன்கள் ராஜேஷ், ரமேஷ் ஆகிய இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஒரு பெண்ணை கேலி, கிண்டல் செய்துள்ளனர். இதனால் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கொருவர் தகாத வார்த்தையால் திட்டி தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து லோகநாயகி, வளவனூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் தயாநிதி, ராஜாமணி, தெய்வசிகாமணி, செல்வமணி, சிவமணி, சரிதா ஆகியோர் மீதும், அதேபோல் ராஜாமணி கொடுத்த புகாரின்பேரில் ராஜேஷ், ரமேஷ், சிவகண்டன், கனகராஜ், ராமகிருஷ்ணன், பூபாலன் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story