10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில் மொத்தம் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.. பள்ளிக்கல்வியின் முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நீங்கள், தங்களுக்கு விருப்பமான கல்லூரிப் படிப்பை சாத்தியப்படுத்தும் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்து, நன்கு படித்து 12-ம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்று சிறக்க எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் .
Related Tags :
Next Story