ஜனாதிபதி பதவிக்கு நல்ல வேட்பாளரை தேர்வு செய்த பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் - பிரேமலதா விஜயகாந்த்


ஜனாதிபதி பதவிக்கு நல்ல வேட்பாளரை தேர்வு செய்த பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் - பிரேமலதா விஜயகாந்த்
x
தினத்தந்தி 2 July 2022 11:23 PM IST (Updated: 3 July 2022 12:19 AM IST)
t-max-icont-min-icon

திரவுபதி முர்முவுக்கு பெண் சமுதாயத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

சென்னை,

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டினார். திரவுபதி முர்முவை சந்தித்து ஆதரவு தெரிவிக்க ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் வருகை தந்தனர்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிமுக, பாஜக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பங்கேற்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பாமக, தேமுதிக, த.மா.கா, புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திரவுபதி முர்முவை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், அவருக்கு பூங்கொத்து வழங்கி ஆதரவு தெரிவித்தார். பின்னர் பேசிய அவர், ஜனாதிபதி பதவிக்கு நல்ல வேட்பாளரை தேர்வு செய்த பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டார். மேலும் திரவுபதி முர்முவுக்கு பெண் சமுதாயத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.


Next Story