காங்கிரஸ் வக்கீல் அணியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் வக்கீல் அணியினர் ஆர்ப்பாட்டம்
x

ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை பறித்ததற்கு காங்கிரஸ் வக்கீல் அணியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரை

மதுரை மாவட்ட காங்கிரஸ் வக்கீல் அணியினர் ராகுல் காந்தி எம்.பி., தகுதி நீக்கத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை மாவட்ட கோர்ட்டு முன்பு காங்கிரஸ் கட்சியின் வக்கீல் அணியினர், மாநில இணை தலைவர் வக்கீல் மாரியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் அணி நகர மாவட்ட தலைவர் முத்து பாண்டியன் முன்னிலை வகித்தார். ராகுல் காந்தி எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் மற்றும் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராஜா பிரசாத், மாநில ஓ.பி.சி. அணி மாநில துணை தலைவர் சரவணகுமார், உள்ளிட்ட ஏராளமான வக்கீல்கள் பங்கேற்றனர்.


Related Tags :
Next Story