காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும், அதனை தடுக்க தவறிய பா.ஜ.க. அரசை கண்டித்தும் கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் இளையராஜா, நகராட்சி கவுன்சிலர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், அதனை தடுக்க தவறிய பா.ஜ.க. அரசை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மீனவர் பிரிவு மாநில துணை செயலாளர் ராஜி, பொதுக்குழு உறுப்பினர்கள் வீரமுத்து, இளவரசன், இளையபெருமாள், மாவட்ட துணைதலைவர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், நகரதலைவர் குமார், வட்டார தலைவர்கள் தனபால், சரண்ராஜ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மாதேஷ், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் கவுதம் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.