காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று சென்னை வருகை


காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று சென்னை வருகை
x

கோப்புப்படம்

முதல்-அமைச்சர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று சென்னைக்கு வருகை தர உள்ளார்.

சென்னை,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பு ஏற்ற பின்னர் முதல் முறையாக 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். இன்று (புதன்கிழமை) மதியம் 1 மணிக்கு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, 2.05 மணிக்கு சென்னை வந்தடைகிறார்.

மதியம் 2.30 மணி முதல் 4 மணி வரை முக்கிய பிரமுகர்களை அவர் சந்திக்கிறார். மாலை 5 மணிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்கிறார். இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு இன்று இரவு சென்னையிலேயே மல்லிகார்ஜூன கார்கே தங்குகிறார்.

நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்துக்கு சென்று, மரியாதை செலுத்த இருக்கிறார்.

மதியம் 1 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டு 2 மணிக்கு சென்னை வந்தடைகிறார். தொடர்ந்து 2 மணி முதல் 3 மணி வரை முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார். பின்னர் மாலை 4.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு பெங்களூரு செல்கிறார்.


Next Story