"கோவை புறக்கணிக்கப்படும் என்ற யூகங்கள் பொய்யானது" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


கோவை புறக்கணிக்கப்படும் என்ற யூகங்கள் பொய்யானது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x

கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 368 கோடி ருபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

கோவை,

திமுக ஆட்சியில் கோவை புறக்கணிக்கப்படும் என்று வெளியான ஊகங்களை பொய்யென்று முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர் செந்தில் பாலாஜியும் நிரூபித்துள்ளனர் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

கோவைக்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலின், நேரு விளையாட்டு அரங்கில் 7 கோடி ரூபாய் செலவில் செயற்கை இழை ஓடுதளப்பாதை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.

அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தனது துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 368 கோடி ருபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


Next Story