விழாவில் பங்கேற்க சம்மதம்: ஜனாதிபதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி


விழாவில் பங்கேற்க சம்மதம்: ஜனாதிபதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி
x
தினத்தந்தி 29 April 2023 5:34 AM IST (Updated: 29 April 2023 6:07 AM IST)
t-max-icont-min-icon

கலைஞரின் நூற்றாண்டு தொடக்கவிழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு அழைப்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை,

கலைஞரின் நூற்றாண்டு தொடக்கவிழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு அழைப்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

வருகிற ஜூன் 5-ந் தேதி சென்னை கிண்டியில் கலைஞர் நினைவு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைப்பதற்கும், அதே நாளில் சென்னை நந்தனத்தில் நடைபெறும் திராவிட பெருந்தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்கவிழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கும் எனது அழைப்பை ஏற்றுக்கொண்டமைக்காக ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story