கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரத்தில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தொழிலாளர் நலத்துறையில் 35,36,37-வது நல வாரிய சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அரசாணையாக வெளியிட வேண்டும். மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வு வயது 55 என அறிவித்திட வேண்டும்.
ஓய்வூதியர்கள் இயற்கை மரணம் அடைந்தால் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் அய்யத்துரை ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சிவாஜி, கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் சந்தானம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
Related Tags :
Next Story