விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம்
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா, சிலை ஊர்வலம் நடத்துவது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விழா தொடர்பாக விழாக்குழுவினர் பின்பற்ற வேண்டிய பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து எடுத்துக்கூறப்பட்டது.
அப்போது போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூறுகையில், விழா நடத்தும் குழுவினரிடம் இரவு சாப்பாடு வாங்கி தரும்படி போலீசார் கேட்கக் கூடாது. அவ்வாறு கேட்கும் போலீசார் குறித்து புகார்கள் வரப்பெற்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
விழா மற்றும் ஊர்வலத்தில் சிறிய, சிறிய விஷயங்களை விட்டுக் கொடுத்து அமைதியாக விழாவினை கொண்டாட காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் விழாக்குழுவினர் கலந்து கொண்டனர்.