கோயம்பேடு சந்தையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுடன் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்


கோயம்பேடு சந்தையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுடன் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்
x

வடமாநில தொழிலார்களுக்கு உறுதுணையாக இருப்போம் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

சென்னை,

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவிய நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் உடனான பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், அவர்களின் அச்சத்தைப் போக்கும் விதமாகவும் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் வடமாநில தொழிலார்களுக்கு உறுதுணையாக இருப்போம் என உறுதியளித்தனர்.


1 More update

Next Story