ஊராட்சி மன்ற தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம்
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான திட்டங்கள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான திட்டங்கள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அரசின் சிறப்பு நல திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.
கூட்டத்துக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசுகையில், ''ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் அரசின் மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ துறை மற்றும் மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக உள்ள பல்வேறு நல திட்டங்கள் இருப்பதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்றார்.
துறைகளின் மூலம் கிடைக்கப்பெறும் நலத்திட்ட உதவிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு விளக்கி கூறினர்.
மேலும் திட்டங்கள் நடைமுறைகளை ஊராட்சி மன்ற தலைவர்கள் நன்கு தெரிந்து கொண்டு தங்களுக்கான சந்தேகங்களை இங்கு வந்துள்ள துறைச் சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்து, உங்கள் ஊரில் உள்ள மக்கள் இது போன்ற திட்டங்களின் மூலம் பயன்பெற தெரியாமல் உள்ளவர்களுக்கு திட்டம் குறித்து தெரியப்படுத்தி அவர்களை ஊக்கப்படுத்தி பயன்பெற செய்ய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பூங்கொடி, தாட்கோ மேலாளர் அமுதாராஜ், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் கோமதி மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.