தொடர் கனமழை: திருவண்ணாமலை வட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழை தொடரும் எனவும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கனமழை காரணமாக 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தொடர் கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யார், வந்தவாசி ஆகிய நகராட்சிகளிலும் வெம்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய வட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று (1.11.2022) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.