தொடர் கனமழை: கூடலூர்- மசினகுடி இடையே 6-வது நாளாக போக்குவரத்து நிறுத்தம்


தொடர் கனமழை: கூடலூர்- மசினகுடி இடையே 6-வது நாளாக போக்குவரத்து நிறுத்தம்
x

கூடலூரில் தொடர் கனமழையால், ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் கனமழை நீடித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் தெப்பக்காடு பகுதியில் உள்ள மாயாற்றில் தரைப்பாலத்திற்கு மேல் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று 6-வது நாளாக உதகையிலிருந்து மசினகுடி வழியாக மைசூர் மற்றும் கூடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மசினகுடி போலீசார் வாகனங்கள் செல்வதை தடுக்க, தடுப்புகளை வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story