காரைக்காலில் தொடர் மின் தடை: நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்


காரைக்காலில் தொடர் மின் தடை: நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
x

காரைக்காலில் தொடர் மின் தடை காரணமாக நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காரைக்கால்,

காரைக்காலில் மின்துறை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தொடர் மின் தடை நிலவி வருகிறது.

யூனியன் பிரதேசங்களில் மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, புதுச்சேரியில் மின் துறை ஊழியர்கள் தொடர்ந்து பலக்கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரி அரசு இந்த தனியார் மய கொள்கையை எதிர்க்காமல், மின்துறையை தனியார் மையமாக்குவதற்கு அரசு டெண்டர் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதுச்சேரி அரசின் இந்த முடிவை கண்டித்து, காரைக்கால் மாவட்ட மின் துறை ஊழியர்கள், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் காரைக்கால் மாவட்டம் முழுவதும் மீண்டும் 2 மணிநேரத்திற்கும் மேலாக தொடர் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமக பொதுமக்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறனர்.


Next Story