கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் ஒப்பந்ததாரர்கள் மனு


கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் ஒப்பந்ததாரர்கள் மனு
x
தினத்தந்தி 12 Oct 2023 12:15 AM IST (Updated: 12 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

டெபாசிட் பணத்தை தராமல் அலைக்கழிப்பு செய்வதாக கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் ஒப்பந்ததாரர்கள் மனு புகார் மனு கொடுத்தனர்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஒப்பந்ததாரர்கள் கள்ளக்குறிச்சி சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் 15-வது நிதி குழு திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ள கடந்த 2020-21-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டெண்டர் கோரப்பட்டது. இதில் சின்னசேலம் பகுதி ஒப்பந்ததாரர்கள் கலந்துகொண்டு டெண்டருக்காக பல லட்சம் ரூபாய் டெபாசிட் செலுத்தினர். ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து நிர்வாக காரணங்களால் டெண்டர் விடாமல் அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர். இதையடுத்து ஒப்பந்ததாரர்கள் தாங்கள் செலுத்திய டெபாசிட் தொகையை திருப்பி திருமாறு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டனர். ஆனால் 2 ஆண்டுகள் பணத்தை திருப்பி தராமல் அலைக்கழித்து வருவதாகவும், இதனால் தற்போது எந்தஒரு வேலையையும் செய்ய முடியாத நிலை உள்ளதாகவும், எனவே பணத்தை திருப்பி தருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரிடம் ஒப்பந்ததாரர்கள் புகார் மனு கொடுத்தனர்.


Related Tags :
Next Story