'வரலாறே இல்லாதவர்கள் வரலாறு பற்றி பேசும் போது தான் சர்ச்சை ஏற்படுகிறது' - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்


வரலாறே இல்லாதவர்கள் வரலாறு பற்றி பேசும் போது தான் சர்ச்சை ஏற்படுகிறது - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
x

தலைமை பதவிக்கு வருவதற்கு பொறுமையும், சகிப்புத்தன்மையும் அவசியம் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை,

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கு அ.தி.மு.க.வினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தலைமை பதவிக்கு வர நினைப்பவர்களுக்கு பொறுமையும், சகிப்புத்தன்மையும் அவசியம் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வரலாறே இல்லாதவர்கள் வரலாறு பற்றி பேசும் போது தான் சர்ச்சைகள் ஏற்படுகின்றன. தலைவராக வர நினைப்பவர்களுக்கு பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவையெல்லாம் இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.


Next Story