திருநின்றவூர் அருகே ஏரியில் சமையல்காரர் பிணம்


திருநின்றவூர் அருகே ஏரியில் சமையல்காரர் பிணம்
x

திருநின்றவூர் அருகே ஏரியில் சமையல்காரர் பிணமாக கிடந்தார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அடுத்த நத்தமேடு ஏரியில் நேற்று முன்தினம் மாலை ஆண் பிணம் மிதந்து கொண்டிருப்பதாக அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து திருநின்றவூர் போலீசாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். உடல் உப்பிய நிலையில் ஆண் பிணம் ஒன்று மிதந்து கொண்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து ஆவடி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டனர்.

போலீஸ் விசாரணையில் ஏரியில் இறந்து கிடந்த நபர் அரக்கோணம் அடுத்த அன்வர்த்திக்கான்பேட்டையை சேர்ந்த சமையல்காரர் அலாவுதீன் (வயது 58) என்பது் தெரியவந்தது. வாரத்தில் 2 முறை மட்டுமே வீட்டுக்கு செல்லும் அவர் தற்போது வீட்டில் இருந்து புறப்பட்டு வந்து ஒரு வாரத்திற்கு மேல் வீட்டுக்கு செல்லாமல் இருந்தது தெரியவந்தது.

இந்த நிலையில்தான் நத்தமேடு ஏரியில் இறந்து கிடந்துள்ளார். திருநின்றவூர் போலீசார் அலாவுதீன் உடலை மீட்டு பிரதபரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அலாவுதீன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ஏரியில் தவறி விழுந்து இருந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story