ஸ்ரீவில்லிபுத்தூரில் செப்பு தேரோட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் செப்பு தேரோட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரிய பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு விழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவினை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமா தேவியுடன் கீழ ரத வீதியில் உள்ள செப்பு தேர் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அதன் பிறகு செப்பு தேரில் பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் தேரோட்டம் நடைபெற்றது. கீழரத வீதி, தெற்கு ரத வீதி, மேலரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக மீண்டும் செப்பு தேர் மண்டபத்தை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story