சேலம் மாவட்டத்தில் புதிதாக 88 பேருக்கு கொரோனா


சேலம் மாவட்டத்தில் புதிதாக 88 பேருக்கு கொரோனா
x

சேலம் மாவட்டத்தில் புதிதாக 88 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

சேலம்

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 85 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், புதிதாக நேற்று 88 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேநேரத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 56 பேர் குணமடைந்துவிட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மாவட்டத்தில் 462 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது இடங்களுக்கு மக்கள் செல்லும்போது கட்டாயம் முககவசம் அணிந்து செல்ல வேண்டும். அதேபோல் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story