தர்மபுரியில்கொரோனாவுக்கு முதியவர் பலி
தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தர்மபுரியை சேர்ந்த 78 வயது முதியவருக்கு சளி, காய்ச்சல், மற்றும் மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்பட்டது. இவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு தர்மபுரி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் உள்பட மாவட்டம் முழுவதும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட 21 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story