தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா.. இன்று 100-ஐ தாண்டியது !


தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா.. இன்று 100-ஐ தாண்டியது !
x

தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

சென்னை,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் கடந்த மாதம் 10க்கும் குறைவாக இருந்த பாதிப்பு தற்போது மெல்ல மெல்ல அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 102 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 634 ஆக அதிகரித்துள்ளது. மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்தே கொரோனா எண்ணிக்கை உயரத் தொடங்கிய நிலையில் 100ஐ கடந்துள்ளது.


Next Story