கொரோனா அதிகரிப்பு: "தமிழகத்தில் தீவிர கட்டுப்பாடுகளுக்கு அவசியமில்லை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:-
தமிழக்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.
கொரோனா தொற்று அதிகரித்தாலும் 5% பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதனால் தீவிர கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவையில்லை. 31-வது தடுப்பூசி முகாம் வரும் ஜூலை 10-ம் தேதி நடைபெறவுள்ளது. மக்கள் தடுப்பூசி முகாமை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
தடுப்பூசி செலுத்துவது, முகக்கவசம் அணிவது மட்டுமே கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான சிறந்த வழிமுறை. கல்வி நிலையங்களில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், வகுப்பறைகளில் முகக்கவசம் அணிந்து தனி மனித இடைவெளி விட்டு மாணவர்கள் அமர வைக்க சுகாதாரத் துறை சார்பில் கல்வித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.