கொரோனா பரிசோதனை - சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு


கொரோனா பரிசோதனை - சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு
x

கோப்புப்படம்

கொரோனா பரிசோதனைகளில் தளர்வுகள் குறித்த புதிய வழிகாட்டுதல்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் கொரோனா பரிசோதனைகளில் தளர்வுகள் குறித்த புதிய வழிகாட்டுதல்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி அறிகுறிகள் இருந்தால் மட்டுமே இனி கொரோனா பரிசோதனைகள் செய்யப்படும் என்றும் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழக்கமாக மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகள் இனி தேவை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் அறுவை சிகிச்சை நோயாளிகள் ஆகியோருக்கு அறிகுறிகள் இல்லாத நிலையில் கொரோனா பரிசோதனை தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் பயணிகளில் 2% பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யும் முறையும் ரத்து செய்யப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


Next Story