சென்னையில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு: பொதுமக்கள் உஷாராக இருக்க மாநகராட்சி எச்சரிக்கை


சென்னையில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு: பொதுமக்கள் உஷாராக இருக்க மாநகராட்சி எச்சரிக்கை
x

சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இதைதொடர்ந்து பொதுமக்கள் உஷாராக இருக்க மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை 1 கோடியே 10 லட்சத்து 34 ஆயிரத்து 921 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இவற்றில் முதல் தவணையாக 97.69 சதவீதமும், 2-ம் தவணையாக 86.62 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளது. 6 லட்சத்து 2 ஆயிரத்து 998 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் சார்பில் இதுவரை 37 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் 43 லட்சத்து 97 ஆயிரத்து 550 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் நேற்றைய தினம் தொற்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. பண்டிகை கால விடுமுறைகள் நெருங்கி வரும் வேளையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மக்கள் உஷாராக பொது இடங்களில் கட்டாயமாக முககவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும், கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் சளி, காய்ச்சல் இருப்பின் சுயசிகிச்சை மேற்கொள்ளாமல் டாக்டர்களிடம் செல்ல வேண்டும்.

இவ்வாறு சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story