"ராணுவ வீரரை அடித்து கொன்ற கவுன்சிலர்" - கொந்தளித்த அண்ணாமலை


ராணுவ வீரரை அடித்து கொன்ற கவுன்சிலர் - கொந்தளித்த அண்ணாமலை
x

ராணுவ வீரர்களுக்குக் கூட பாதுகாப்பில்லாத மோசமான கட்சியின் ஆட்சிக்கு எதிராக, அடுத்த சில நாட்களில் போராட்டம் நடைபெறுமென அண்ணாமலை கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக கவுன்சிலரால் அடித்துக் கொல்லப்பட்ட ராணுவ வீரர் பிரபுவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தமிழக பாஜகவின் முன்னாள் ராணுவப் பிரிவினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன்பு இன்று போராட்டம் நடத்துவார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில், ராணுவ வீரர்களுக்குக் கூட பாதுகாப்பில்லாத மோசமான கட்சியின் ஆட்சிக்கு எதிராக, அடுத்த சில நாட்களில் போர் நினைவிடத்தில் போராட்டம் நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story