பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 2-ம் தேதி தொடங்கும் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு


பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 2-ம் தேதி தொடங்கும் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
x

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 2-ம் தேதி தொடங்கும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

சென்னை,

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 2-ம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் பொன்முடி கூறியதாவது:-

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு ஜூலை 2-ம் தேதி தொடங்குகிறது. ஆக. 2ஆம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு மாதம் முன்கூட்டியே தொடங்குகிறது.

முதலில் சிறப்பு பிரிவுனருக்கான கலந்தாய்வு நடக்கவுள்ள நிலையில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 7-ம் தேதி தொடங்குகிறது. சிபிஎஸ்இ மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால் முன்னதாக கலந்தாய்வு நடக்கிறது. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் வசதிக்காக சனி, ஞாயிறுகளில் கல்லூரிகள் திறந்திருக்கும்.

அனைத்து அரசு அறிவியல், கலை கல்லூரிகளில் நுழைவுக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.200 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாலிடெக்னிக், பட்டய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு நாளை முதல் தொடங்குகிறது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க மேலும் 3 நாட்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story