நாமக்கல் மாவட்டத்தில்மக்கள் நீதிமன்றத்தில் 77 வழக்குகளுக்கு தீர்வு
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, நாமக்கல் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுமுறை தீர்வு மைய கட்டிடத்தில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான குணசேகரன் தலைமை தாங்கினார். இதில் மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக்கொள்ள வழிவகை செய்யபட்டது.
நாமக்கல்லில் நடந்த மக்கள் நீதிமன்ற அமர்வில் நீதிபதி கிருஷ்ணன், முதன்மை சார்பு நீதிபதி விஜய் கார்த்திக் உள்ளிட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனர். இதேபோல் திருச்செங்கோட்டில் நீதிபதிகள் சுரேஷ், தமிழரசி, ராசிபுரம் சார்பு நீதிபதி தீனதயாளன் உள்ளிட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனர். இதில் குமாரபாளையம் மற்றும் சேந்தமங்கலம் பகுதிகளில் உள்ள வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
மொத்தமாக இந்த மக்கள் நீதிமன்றத்தில் சாலை விபத்துக்கள் தொடர்பான 98 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.அதில் 77 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. இவற்றில் ரூ.3 கோடியே 67 லட்சத்து 34 ஆயிரத்து 74 வழங்கி பைசல் செய்யப்பட்டது.