வங்கி நிர்வாக இயக்குனர் உள்பட 33 பேருக்கு பிடிவாரண்டு


வங்கி நிர்வாக இயக்குனர் உள்பட 33 பேருக்கு பிடிவாரண்டு
x

பணம் செலுத்த வேண்டிய தீர்ப்புகளை நிறைவேற்றாத வங்கி நிர்வாக இயக்குனர் உள்பட 33 பேருக்கு பிடிவாரண்டு; நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவுவிட்டது.

நாமக்கல்

வழக்கு தாக்கல் செய்தவருக்கு இழப்பீடு மற்றும் வேறு காரணங்களுக்கு எதிர் தரப்பினர் பணம் செலுத்த வேண்டும் என்று வழங்கப்பட்ட தீர்ப்புகளை நிறைவேற்றாத நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட 72 வழக்குகள் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன. இவை அனைத்தும் நேற்று ஒரே நாளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 25 வழக்குகளில் பணம் செலுத்த வேண்டியவர்களாக உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் நிர்வாக இயக்குனர், வங்கி கிளை மேலாளர்கள் 2 பேர் உள்பட 33 பேருக்கு பிடி வாரண்டு பிறப்பித்து நாமக்கல் மாவட்ட நுகர்வோர் ஆணைய உறுப்பினர் ஏ.எஸ்.ரத்தினசாமி முன்னிலையில் நீதிபதி டாக்டர் வீ.ராமராஜ் உத்தரவிட்டு உள்ளார். மேலும் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 4 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. மற்ற 68 வழக்குகள் மீண்டும் அடுத்த மாதம் (ஜூன்) 5-ந் தேதி விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டது.


Next Story