பிளாஸ்டிக் மறுசுழற்சி உரிமம் பெற காலக்கெடுவை நீட்டிக்க கோரிய வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


பிளாஸ்டிக் மறுசுழற்சி உரிமம் பெற காலக்கெடுவை நீட்டிக்க கோரிய வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x

பிளாஸ்டிக் மறுசுழற்சி உரிமம் பெற காலக்கெடுவை நீட்டிக்க கோரிய வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

பிளாஸ்டிக் மறு சுழற்சி செய்யும் உரிமம் பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கும் வகையில், அந்த நிறுவனங்கள், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அங்கீகாரத்தை பெற வேண்டும். அதற்காக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவில் விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவை நீட்டிக்க கோரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அங்கீகாரம் பெற இணையதளத்தில் பதிவு செய்வதற்கு, ஆலை இயங்க ஒப்புதல் அளித்த உத்தரவை பதிவேற்றம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆலைகள் இயங்க ஒப்புதல் அளிக்கவில்லை.

ஒப்புதல் கடிதம் இல்லாததால் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அங்கீகாரம் கோரி பதிவு செய்ய இயலவில்லை. அதனால், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ள காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும். பதிவு செய்யாத ஆலைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தடை விதிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வி.எம்.வேலுமணி, வி.லட்சுமி நாராயணன் ஆகியோர், இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.


Next Story