தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பு; மேலும் 34 பேருக்கு கொரோனா


தமிழ்நாட்டில்  தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பு; மேலும் 34 பேருக்கு கொரோனா
x

கோப்பு படம்

தினத்தந்தி 4 Jan 2024 3:09 PM GMT (Updated: 4 Jan 2024 3:37 PM GMT)

தமிழ்நாட்டில் இன்று 649 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

சென்னை,

ஜேஎன் 1 என்ற உறுமாறிய கொரோனா தற்போது கேரளா, பெங்களூரு மற்றும் அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிலும் பாதிப்பை அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பு தற்போது இரட்டை இலக்கமாக பதிவாகி வருகிறது. பாதிப்பின் வேகம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்தநிலையில், தமிழ்நாட்டில் இன்று 649 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 34 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இன்று கொரோனா பாதிப்பில் இருந்து 22 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 190 ஆக உயர்ந்துள்ளது.


Next Story