திருச்சியில் கிரிக்கெட் பயிற்சி மையம்


திருச்சியில் கிரிக்கெட் பயிற்சி மையம்
x

திருச்சியில் கிரிக்கெட் பயிற்சி மையம் வர உள்ளது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணை செயலாளர் கூறினார்.

புதுக்கோட்டை

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணை செயலாளர் பாபா புதுக்கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- "தமிழகத்தில் கிராமப்புறங்களில் இருந்து கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளை திறமைகளின் அடிப்படையில் தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்படுகிறது. பெண்களுக்கான கிரிக்கெட்டில் வீராங்கனைகளை தேர்வு செய்வதில் 1,079 பெண்கள் கலந்து கொண்டனர். இதில் சிறந்த வீராங்கனைகளை தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்படுகிறது. நாங்கள் நடத்தும் முகாமில் எத்தனை பேர் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். அதில் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 4 இடங்களில் "சாட்டிலைட் சென்டர்" என்ற மையம் திறக்கப்பட்டுள்ளது. திருப்பூர், கோவை, தேனி உள்ளிட்ட இடங்களில் தொடங்கி உள்ளோம். அந்தந்த மையங்களின் அருகே உள்ள மாவட்டங்களில் இருந்து வீரர்களை வரவழைத்து பயிற்சி அளிக்கப்படுகிறது. திருச்சியில் சாரநாதன் என்ஜினீயரிங் கல்லூரியில் "சாட்டிலைட் சென்டர்" வர உள்ளது. இதில் புதுக்கோட்டை, அரியலூர் உள்பட பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களை தேர்ந்தெடுத்து முகாம் நடத்தப்பட உள்ளது. வேகப்பந்து வீச்சாளர் சேலம் நடராஜன் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். உலக கோப்பைக்கான கிரிக்கெட்டில் அஸ்வின் இடம்பெறாததால் பலவீனமாக இல்லை. இந்திய கிரிக்கெட் அணி நன்றாக உள்ளது. சாய் சுதர்சன், சாய் கிஷோர் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் விளையாட சென்றுள்ளனர். அங்குள்ள காலநிலைக்கு ஏற்ப அவர்கள் விளையாட ஒரு பயிற்சியாக இருக்கும்''. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக புதுக்கோட்டையில் கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story