கரண்ட் திருட்டு: வழி நெடுக கிடந்த வயர்கள் - கட்சி கூட்டத்தில் பகீர் கிளப்பிய சம்பவம்

கரண்ட் திருட்டு: வழி நெடுக கிடந்த வயர்கள் - கட்சி கூட்டத்தில் பகீர் கிளப்பிய சம்பவம்
x

கிருஷ்ணகிரி அருகே, அதிமுக பொதுக்கூட்டத்திற்காக மின் கம்பத்தில் இருந்து ஆபத்தான முறையில் மின்சாரம் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே, அதிமுக பொதுக்கூட்டத்திற்காக மின் கம்பத்தில் இருந்து ஆபத்தான முறையில் மின்சாரம் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பேருந்து நிலையத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக மேடை அமைக்கப்பட்டு, மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.

இந்த நிலையில், இதற்கான மின்சாரத்தை மின் கம்பங்களில் இருந்து திருட்டுத்தனமாக எடுத்ததாகவும், ஆபத்தான முறையில் தரையில் படும்படி மின் வயர்கள் இருந்ததாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Next Story