வேலை வாங்கி தருவதாக மோசடி பணம் கொடுத்தவருக்கு அரிவாள் வெட்டு


வேலை வாங்கி தருவதாக மோசடி பணம் கொடுத்தவருக்கு அரிவாள் வெட்டு
x

வேலை வாங்கி தருவதாக மோசடி பணம் கொடுத்தவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

திருச்சி

செம்பட்டு:

திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமு. இவரது மகன் மணிகண்டன் (வயது 40). திருச்சி ஏர்போர்ட் காந்திநகர் பகுதியை சேர்ந்த சரவணன் (45) என்பவர் மணிகண்டனிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால் அவர் வேலை வாங்கி தரவில்லை. இதையடுத்து அவரிடம் கொடுத்த பணத்தை மணிகண்டன் கேட்டுள்ளார். இதற்கு அவர் ரூ.2 லட்சம் மட்டும் கொடுத்துள்ளார். இதையடுத்து மீதமுள்ள ரூ.1 லட்சத்தை வாங்குவதற்காக மணிகண்டன், சரவணன் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் ஆவேசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சரவணன் மற்றும் அவரது மகன் யுவராஜ் ஆகியோர் மணிகண்டன் வீட்டிற்கு வந்து அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் காயமடைந்த மணிகண்டன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஏர்போர்ட் போலீசார் சரவணன் மற்றும் யுவராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story