சென்னை அண்ணா நகரில் 80 ஆயிரம் குடும்பங்களுக்கு மழை நிவாரண பொருட்கள்- அமைச்சர் உதயநிதி வழங்கினார்


சென்னை அண்ணா நகரில் 80 ஆயிரம் குடும்பங்களுக்கு மழை நிவாரண பொருட்கள்- அமைச்சர் உதயநிதி வழங்கினார்
x

10 நாட்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், நாமக்கல் மாவட்டத்திலிருந்து 54 பெரிய ரக லாரிகளில் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

சென்னை:

சென்னை அண்ணா நகர் தொகுதியில் மிக்ஜம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு , சட்டமன்ற உறுப்பினர் மோகன் ஏற்பாட்டில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

சென்னை அண்ணா நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 4ம் தேதி முதல் 60,000 மக்களுக்கு உணவு, பால் மற்றும் 2000 லிட்டர் தண்ணீர் வழங்கினார் அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன்.

இந்த நிலையில் நேற்று 80,000 குடும்பங்களுக்கு நிவாரண மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி அண்ணாநகர் சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு முதல் 100 பேருக்கு பொருட்களை வழங்கினார்.

இது குறித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் கார்த்திக் மோகன் பேசுகையில், 'மக்கள் நலன் கருதி தூய்மை பணிக்காக சொந்த நிதியில் இருந்து 30 லாரிகள் மற்றும் 20 சுத்திகரிப்பு இயந்திரம் கொண்டு தொடர்ந்து 5 நாட்கள் தொகுதிக்குட்பட்ட 14 வட்டங்களில் மழை வெள்ளத்தால் தேங்கி கிடந்த கழிவுகளை அகற்றினோம்.

இதை தொடர்ந்து தொகுதிக்குட்பட்ட 80,000 குடும்பங்களுக்கு நிவாரணமாக 10 நாட்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் நாமக்கல் மாவட்டத்திலிருந்து 54 பெரிய ரக லாரிகளில் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு, பின்னர் சென்னை மாநகருக்குள் சிறிய ரக லோடு ஆட்டோக்களில் கொண்டு வந்து விநியோகம் செய்யப்படுகின்றன. 5 நாட்களில் இந்த 80,000 குடும்பங்களுக்கு சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது' என்றார்.


Next Story