மிக்ஜம் புயல் பாதிப்பு: தலைமை செயலகத்தில் மத்திய குழுவினர் ஆலோசனை


மிக்ஜம் புயல் பாதிப்பு: தலைமை செயலகத்தில் மத்திய குழுவினர் ஆலோசனை
x

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2 குழுக்களாக பிரிந்து மத்திய குழுவினர் ஆய்வு செய்யவுள்ளனர்.

சென்னை,

மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை, வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில், 6 பேர் கொண்ட மத்திய குழு அமைக்கப்பட்டது. நேற்று இரவு டெல்லியில் இருந்து சென்னை வந்த மத்திய குழுவினர், கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினர். மத்திய குழுவினர் இன்றும், நாளையும் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்யவுள்ளனர்.

இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் வருவாய், நிதித்துறை, போக்குவரத்து, நெடுஞ்சாலை, காவல் உள்ளிட்ட துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

ஆலோசனைக்கு பிறகு மத்திய குழுவினர் 2 குழுக்களாக பிரிந்து, ஒரு குழுவினர் வடசென்னை, மத்திய சென்னை, ஆவடி, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளிலும், மற்றொரு குழுவினர் தென்சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளிலும் ஆய்வு செய்கின்றனர். தமிழக அரசு அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களும் உடன் செல்கின்றனர்.


Next Story