22-ந்தேதி முதல் மதுரை-சிங்கப்பூர் இடையே தினசரி விமான சேவை
மதுரை விமான நிலையத்தில் 22-ந்தேதி முதல் மதுரை-சிங்கப்பூர் இடையே தினசரி விமான சேவை இயக்கப்படுகிறது.
மதுரை
மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கும், துபாய், சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவை நடைபெற்று வருகிறது. தற்ேபாது மதுைர-சிங்கப்பூர் இடையே வாரத்துக்கு 3 நாள் மட்டுமே விமான சேவை உள்ளது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விமான சேவை தொடங்கப்பட இருக்கிறது. அதன்படி வருகிற 22-ந் தேதி முதல் மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கும் தினசரி விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story